மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரி புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு 04ஆம் திகதி சனிக்கிழமை  நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

தொடர்ந்து புதிய கல்வியாண்டிற்கான ஆரம்ப விரிவுரையை மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுகதொடர்பு நிலைய இயக்குநர் அருட்தந்தை லக்ஸ்ரன் டி சில்வா அவர்கள் “இலத்திரணியல் யுகத்தில் நற்செய்தி அறிவிப்பு மற்றும் இலத்திரணியல் ஊடக வழி நற்செய்தி அறிவிப்பின் சந்தர்ப்பங்களும் சவால்களும்” என்னும் தலைப்பில் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கல்லூரி மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin