மன்னார் மறைமாவட்ட இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால பாதயாத்திரை கடந்த 26ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.
மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமாகி பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலம் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயங்களினூடாக கோமரசங்குளம் கல்வாரி திருத்தலத்தை சென்றடைந்து அங்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
97KM தூரத்தைக்கொண்ட இம் மூன்று நாள் பாதயாத்திரையில் 5000ற்கும் அதிகமானவர்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.