மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா 8ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
 
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலிருந்தும் 300ற்கும் அதிகமான இளையோர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களும், குரு முதல்வர் அருட்பணி கிறிஸ்து நாயகம் மற்றும், குருக்கள் மக்களென பலரும் கலந்து இளையோருக்கு உற்சாகம் வழங்கி நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin