மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும் உயிர்த்த ஆண்டவர் சமூகமும் இணைந்து முன்னெடுத்த மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம் 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, அனுபவ பகிர்வு, தியான உரைகள், பாவசங்கீர்த்தனம், திருப்பலி என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 200 வரையான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.