மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால திருயாத்திரை கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் வழிநடத்தலில் “சிலுவையோடு பயணிப்போம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இவ்யாத்திரை மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள மடு அன்னை திருச்சுருபத்திற்கு முன்பாக ஆரம்பமாகி தள்ளாடி புனித அந்தோனியார் திருத்தலத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.

நற்கருணை வழிபாட்டை அருட்தந்தை மரியதாஸ் குருஸ் அவர்கள் நெறிப்படுத்தியதுடன் இறுதி ஆசீரை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் வழங்கிவைத்தார்.

இவ்யாத்திரையில் மன்னார் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 500ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin