மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கடந்த மார்கழி மாதம் 14ஆம் திகதி நியமனம்பெற்ற, அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு வருகின்ற 22ஆம் திகதி, சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மடுத்திருத்தலத்தில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இத்திருச்சடங்கில் ஏனைய மறைமாவட்ட ஆயர்களும் பங்குபெறவுள்ளதுடன் புதிய ஆயராக திருநிலைப்படுத்தப்படும் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் மன்னார் மறைமாவட்டத்தை பொறுப்பெடுக்கும் நிகழ்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து ஆயர் அவர்களினால் அவருடைய பங்காகிய அடம்பன் மூங்கில் முறிச்சான், புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்குனி மாதம் 16ம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு நன்றி திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

By admin