மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்கள் பெறுப்போற்று தனது பணியை ஆரம்பித்துள்ள நிலையில் மறைமாவட்டத்தின் குருக்களுக்கான சில பணிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
குருமுதல்வராக அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களும் நிதியாளராக அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களும் புதிய ஆயரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குருமுதல்வராக நியமனம்பெற்றுள்ள அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள் 1997ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படத்தப்பட்டு மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் பணியாற்றியதுடன் பத்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளதுடன் பல சர்வதேச தமிழ் மாநாடுகளில் பங்குபற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.