மன்னார் மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்த ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி 06ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், இறைமக்களெனப் பலரும் கலந்து இறந்தவர்களை நினைவுகூர்ந்து செபித்தார்கள்.