மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு திருத்தொண்டர்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
30ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் திருத்தொண்டர்களான றெனால்ட் சகாய தர்சன், சலமோன் ஆகியோரே குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதிய குருக்கள் பணி வாழ்வில் அர்ப்பணத்துடன் நிலைத்திருந்து இறைபணியாற்ற யாழ். மறை அலைத் தொலைக்காட்சி குழுமம் சார்பாக இவர்களை வாழ்த்துகின்றோம்