மன்னார் மறைமாவட்டத்தில் வரலாற்றுச்சிறப்புமிக்க பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை அருள்றாஜ் குருஸ் அவர்களின் தலைமையில் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் நடைபெற்றன.


