மன்னார் பேராலய பங்கிலுள்ள புனித மரியன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா 01ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டா அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

450 வருடங்கள் பழமை வாய்ந்த இவ்வாலயம் சிறிய கொட்டிலாக அமைக்கப்பட்டு மன்னாரின் முதலாவது ஆலயமாக தோற்றம் பெற்றது.

1834ஆம் ஆண்டு முருகைக்கல்லினால் கட்டப்பட்ட இவ்வாலயம் பல சேதங்களையும் புனரமைப்புக்களையும், தாங்கியநிலையில் 2013ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை சத்தியராஜ் அவர்களின் காலத்தில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் முன்னாள் ஆயர் பேரருட்தந்தை அமரர் இராயப்பு யோசப் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டு தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் ரெவல் அவர்களின் காலத்தில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து தற்போதைய ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டா அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin