மன்னார் அடம்பன் நாற்சந்தியில் வேகத்தடைகளை அமைக்க கோரி கடந்த 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அப்பகுதி மக்களால் கண்டன எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அப்பிரதேசத்தில் வேகத்தடைகள் இல்லாத காரணத்தால் அண்மைக்காலமாக வீதி விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புக்கள் ஏற்படுவதால் வேகத்தடைகளை அமைத்து விபத்துகளை தடுக்குமாறும் வலியுறுத்தி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் பொதுமக்கள் அருட்தந்தையர்களென பலரும் பங்குபற்றினார்கள்.