மண்டைதீவு பங்கில் திருப்பாலர் சபை பிள்ளைகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாசன் சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட திருப்பாலர் சபை இயக்குனர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்கள் கலந்து திருப்பலி ஒப்புக்கொடுத்து 120 சிறார்களுக்கு சின்னம் சூட்டிவைத்தார்.
தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.