மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிக்குமுகமாக மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மணி மாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி அண்மையில் நடைபெற்ற நிலையில் அப்போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா 7ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
VMCT நிறுவன இயக்குனர் திரு. விமலேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் தேவராஜா, மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி வொலன்ரைன், மன்னார் உதவி வலயக்கல்வி பணிப்பாளர் மனோரஞ்சன், மடு உதவி வலயக்கல்வி பணிப்பாளர் கலவண்ணன் ஆகியயோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பணப்பரிசில்களும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.