மணல்காடு பொற்பதி புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 31ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசிர்வாதமும் நடைபெற்றன. அத்துடன் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக அன்றைய தினம் மாலை கற்பை காத்த மங்கை தென்மோடிக்கூத்தும் பங்குமக்களின் தயாரிப்பில் அங்கு மேடையேற்றப்பட்டது.



