மணல்காடு பங்கில் மறைக்கல்வி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு கடந்த 03ஆம் திகதி சனிக்கிழமை அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிகாட்டலில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பாசறை நிகழ்வில் குழுச்செயற்பாடுகள், கருத்து பகிர்வுகள், மறைஅறிவு விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 200 மாணவர்களும் 14 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தார்கள்.