மணற்காடு பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற யாத்திரையில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து வவுனிக்குளம் கல்வாரிப்பூங்காவை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப் பாதை தியானம், திருப்பலி, நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருட்சாதனம் ஆகியவற்றில் பங்குபற்றினார்கள்.

இந்நிகழ்வில் 110 வரையான மறைக்கல்வி மாணவர்களும் 10 வரையான மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin