சாவகச்சேரி மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த 30ஆம் திகதி கொடியோற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 3ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழாவும் நடைபெற்றது.
நற்கருணைவிழா திருப்பலியை புலோப்பளை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களும் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள புனித லூர்து அன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
நூற்றாண்டு பழமைவாய்ந்த முருகைக்கல்லால் அமைக்கப்பட்ட தற்போதைய ஆலயம் கடந்தகாலங்களில் ஏற்பட்ட போர் அனர்த்தத்தால் சேதமடைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.