மட்டக்களப்பு மறைமாவட்டம் புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புதிய கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வும் கற்கைநெறியை நிறைவுசெய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் கடந்த 17ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்;லூரி முதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்கள் பிரதம விருந்தினராகவும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்தந்தை நவரட்ணம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இறையியல் கற்கைநெறியை நிறைவுசெய்த 36 மாணவர்களுக்கு கலைமாணி பட்டமளிப்பும் 16 மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கலும் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.