மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல துணைப்பங்கான நான்காம் கொலனி சின்னமடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு சொறிக்கல்முனை புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து இறைமக்களினால் செபமாலை பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு சின்னமடுமாதா ஆலயத்தைவந்தடைந்து காலை 7:30 மணிக்கு அருட்தந்தை சுரேந்திரக்குமார் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கபட்டது.