மட்டக்களப்பு மறைமாவட்டம் தேற்றாத்தீவு புனித யூதாததேயு திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை திருச்செல்வம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் அன்றைய தினம் 16 மாணவர்களுக்கு முதல்நன்மை அருட்சாதனமும் வழங்கிவைக்கப்பட்டது.