திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக திருத்தல துணைப்பங்கான ஆறாம் கொலணி அந்தோனியார் ஆலய வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன.