சர்வதேச சிறுவர், ஆசிரியர் மற்றும் திருப்பாலத்துவசபை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருத்தல முன்றலில் நடைபெற்றது.
திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான இல்ல ரீதியான விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் அசிரியர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
அருட்தந்தை பிறைனர் செலர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.