மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை பங்கிலுள்ள செபஸ்தியார்புர வட்டாரத்தில் அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் சிற்றாலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் கடந்த மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அவர்களினால் புனிதரின் திருச்சொருபம் ஆலயத்தில் வைக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் பங்குமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.