மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சகாயமாதா ஆலயத்தை நோக்கிய வருடாந்த பாதயாத்திரை 2ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இரண்டு பிரிவுகளாக இரண்டு இடங்களிலிருந்து முன்னெடுக்கபட்டிருந்த இவ்வரலாற்று சிறப்புமிக்க பாதயாத்திரையின் ஒரு பிரிவு புனித மரியாள் பேராலயத்திலிருந்து காலை 5மணி திருப்பலியை தொடர்ந்து வவுனதீவு ஊடாகவும், மற்றையது செங்கலடி புனித நீக்கிலஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கரடியனாறு ஊடாகவும் நடைபெற்றன.
மட்டக்களப்பு பிராந்திய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற யாத்திரையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பணியாற்றும் குருக்கள், துறவிகள்,அருட்சகோதரிகள் உட்பட பல்யாயிரக்கணக்கானோர் கலந்து 20 கிலோமீற்றர் வரை நடைபவனியாக சென்று வழிபாட்டில் பக்தியோடு பங்குபற்றினர்.