இந்தியாவிலிருந்து வருகைதந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றிவரும் புனித வியாகுல அன்னை மரியின் ஊழிய சபை அருட்சகோதரிகளால் அங்கு முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கான மாலைநேர ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.
தர்மபுரம் புனித சவேரியார் மற்றும் விசுவமடு புனித இராயப்பர் ஆலயங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறுகின்ற இவ்வகுப்புக்களில் அப்பிரதேச மாணவர்கள் பலர் இணைந்து ஆர்வமுடன் கல்விபயின்று வருகின்றனர்.