மாதகல் புனித தோமையார் ஆலய புனித வின்சென்ட் டி போல் சபை குழந்தை யேசு பந்தியின் வருடாந்த ஓன்றுகூடல் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.
மாதகல் பங்குதந்தை அருட்திரு அன்ரனி பாலா அவர்களின் ஓழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ் ஓன்றுகூடல் நிகழ்வில் யாழ் மறைமாவட்ட வின்சென்ட் டி போல் மத்திய சபையின் ஆன்ம ஆலோசகர் அருட்திரு நேசநாயகம் அவர்களும், இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு ஜெயக்குமார் அவர்களும், மத்திய சபை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அயற் பந்திகளின் உறுப்பினர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.