பூமியின் அழுகுரலுக்கும் ஏழைகளின் கூக்குரலுக்கும் செவிமடுத்து பணியாற்றுங்களென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் புனித வின்சென்டிப்போல் மத்திய சபை அங்கத்தவர்களுடனான சந்திப்பில் அழைப்புவிடுத்துள்ளார்.
இச்சந்திப்பு ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேகநாயகம் அவர்களின் தலைமையில் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் 04ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது ஆயர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாம் வாழும் இப்பூமி எல்லோருக்கும் பொதுவானது.
இப்பூமியில் வின்சென்டிப்போல் சபையினர் ஆற்றும் பிறரன்பு பணி மனித மாண்பை காக்கும் உயரிய பணியாக அமைந்துள்ளதுடன் தொடர்ந்தும் அதனை முன்னெடுக்க சபையினர் முனைய வேண்டுமென்பதனையும் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் புனித வின்சன்ட் டி போல் சபையின் புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக கா.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.
தொடர்ந்து அங்கத்தவர்களுக்கான புதுவருட ஒன்றுகூடல் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.