கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயப் பங்கின் புனித வின்சன் டி போல் சபை – கிறிஸ்து அரசர் பந்தியினரது முதலா வது ஆண்டுப் பொதுக் கூட்டம் 20ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் புனித வின்சன் டி போல் மத்திய சபையின் ஆன்ம ஆலோசகர் அருட்திரு நேசநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பங்கின் மத்திய சபைத் தலைவர் செயலாளர் உட்பட அயல் பங்கிலுள்ள பந்திகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வு கொய்யாத்தோட்டப் பங்குதந்தை அருட்திரு ஆனந்தகுமார் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் சிறப்பாக இடம்பெற்றது.