யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் கல்லூரியின் பழைய குரு மாணவர்களுக்கான ஒன்றுகூடல் கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றதுடன் தொடர்ந்து அன்று மாலை விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், குருமட மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin