தவக்கால சிறப்பு நிகழ்வாக புனித பிரான்சிஸ்கன் 3ஆம் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஞான ஒடுக்கம் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
சபை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் நடைபெற்ற இந்நிகழ்வில் உறுப்பினர்கள் யூபிலி புனித கதவு வழியாக ஆலயத்திற்குள் சென்று அங்கு நடைபெற்ற திருச்செபமாலை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி, நற்கருணை ஆராதனை என்பவற்றில் பங்குபற்றினர்.
இத்தியானத்தை செபமாலைதாசர் சபை அருட்தந்தை ஜெபன் அவர்கள் நெறிப்படுத்தியதுடன் இந்நிகழ்வில் 40 வரையான சபை அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.