யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் புனித நியூமன் ஆங்கில மன்ற விழா 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில், மன்றக் காப்பாளர் அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய விரிவுரையாளர் செல்வி திமாந்திரா விஜயசூரிய அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் அருட்சகோதரர்களின் ஆங்கில மொழி புலமையை மேம்படுத்துவதற்காக மன்றத்தால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில் வழங்கலுடன் அருட்சகோதரர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

கலைநிகழ்வுகளில் “Broadway Theatre” எனும் பெயரில் இசை நிகழ்ச்சியும் தொடர்ந்து புகழ் பூத்த உலக நாடகாசிரியர் சேக்ஸ்பியரின் Macbeth நாடகமும் ஆற்றுகைசெய்யப்பட்டு பலரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், குருமட மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin