பொலிகண்டி குழந்தை இயேசு ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட புனித டோமினிக் சாவியோ திருவிழா கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குதந்தை அருட்தந்தை யோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும், விளையாட்டுக்களும், மகிழ்வூட்டல் செயற்பாடுகளும் இடம்பெற்றன.