விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் புனித இராயப்பர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
அருட்சகோதரிகள் ஸ்ரெலா மற்றும் டயானா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து சிறார்களின் கலைநிகழ்வுகளுடன் இவ்வாண்டு கல்வி மற்றம் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறு பெற்ற சிறார்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்கள் பிரதம விருந்தினராகவும் விசுவமடு பிரதேச முன்பள்ளிகளின் சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி. தவப்புதல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin