மானிப்பாய் – புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 28ஆம் திகதி  சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிகாட்டலில் திருமதி. டெசீந்திரா றதீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடனம், நாடகம், நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சட்டத்தரணி சிறில் அமலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் சபை மேலாளர் அருட்சகோதரி அமலி மற்றும் 183 கிராம சேவையாளர் திரு. இயூஜின் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

By admin