புதுக்குடியிருப்பு மந்துவில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
03ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 05ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
 
திருவிழா திருப்பலியை யாழ். மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
 
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin