புதுக்குடியிருப்பு புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
08ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை முல்லைத்தீவு அமைதித்தென்றல் இயக்குநர் அருட்தந்தை பொன்சியன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை முல்லைத்தீவு மகாவித்தியாலய ஆசிரியர் அருட்தந்தை சதீஸ்குமார் அவர்களும் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.