மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள கற்தூணில் கட்டி அடிக்கப்பட்ட ஆண்டவர் சிற்றாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்கள் புதிய சிற்றாலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததுடன் இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.