மன்னார் மறைமாவட்டம் மடுவீதி சிந்தாத்திரை அன்னை பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த துணை ஆலயமான புனித அந்தோனியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபையை சேர்ந்த அருட்தந்தை மங்களதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள்இ அருட்சகோதரிகள்இ பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.