புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் மன்னார் மறைமாவட்டத்திற்கு சென்று அங்கு மடு அன்னை திருத்தலம், சின்ன பண்டிவிருச்சான் சவேரியார் ஆலயம் ஆகியவற்றை தரிசித்தனர்.
இந்நிகழ்வில் 90ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.