புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள் மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை ஜோன் றெக்ஸன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் புங்குடுதீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி திரு. நடராஜா கேதீஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வட இலங்கை சர்வோதய புங்குடுதீவு இணைப்பாளர் செல்வி. யமுனாதேவி அவர்கள் கௌரவ விருந்தனராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.