இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக நவாலி புனித பேதுரு பவுல் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சந்திரபோஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin