பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல திருவிழா வருகின்ற மார்ச் மாதம் 02ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இம்மாதம் 28ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழாவும் 02ஆம் திகதி சனிக்கிழமை திருவிழாவும் இடம்பெறுமென திருத்தல பரிபாலகர் அருட்தந்தை லியான்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.