பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபஸ்ரியன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அத்துடன் பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருக்குடும்ப திருவிழாவும் அண்மையில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin