பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய விழா 30ஆம் திகதி சனிக்கிழமை சென். அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அரங்கில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோம் செல்வநாயகம் அவர்களின் தலைமையில் பங்கு இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட அன்பிய இயக்குநர் அருட்தந்தை யேசுரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் வலய ரீதியாக கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ‘சம்மிக்கேல்’ நாட்டுக்கூத்தும் ஆற்றுகை செய்யப்பட்டு பலரது பாரட்டையும் பெற்றுக் கொண்டது.