பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த 08ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளையோர் ஒன்றியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வுகளில் திருப்பலிகள், நற்கருணைப் பவனி, நடை பவனி, விழிப்புணர்வு தெரு நாடகம், மகிழ்வூட்டல் நிகழ்வுகள், இளையோருக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள், அயற்பங்கு இளையோருடனான கலந்துரையாடல், தீப்பாசறை என்பவை இடம்பெற்றன.
இறுதிநாள் நிகழ்வுகள் கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுடன் அன்றைய தினம் காலை அருட்தந்தை ஜீவா போல் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாலை கலை நிகழ்வுகளுடன் இளையோருக்கான நடனப்போட்டி மற்றும் இவ்வாரத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.
இக்கலைநிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பாலதாஸ் பிறாயன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன் 100 வரையான இளையோர் இந்நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.