கிளிநொச்சி, பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழிற்பயிற்சி நிலையமும் இணைந்து முன்னெடுத்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
அருட்தந்தையர்கள் மெல்வின் றோய் மற்றும் நதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் திருமதி. சார்ல்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பூநகரி பிரதேச சபை தவிசாளர், செயலாளர், கிளிநொச்சி வேர்ல்ட் விசன் நிறுவன முகாமையாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.