பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையின் கோடைகால சிறப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் அவர்களின் தலைமையில் கடந்த மாதம் 24ஆம் திகதி தொடக்கம் இம் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெற்றது.
மாணவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்துமுகமாக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் ஓவியம் வரைதல், ஆடல் பாடல், பட்டம் விடுதல், தீப்பாசறை போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் மாணவர்கள் மிகவும் ஆர்வமாக இந்நிகழ்வில் பங்குபற்றினார்கள்.



