பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 20 வயதுக்குட்பட்ட இளையோருக்கான உதைப்பந்தாட்ட போட்டி 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல்லவராயன்கட்டு புனித டொன் பொஸ்கோ நிறுவன மைதானத்தில் நடைபெற்றது.

இளையோர் மத்தியில் ஒற்றுமையையும் தோழமையையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இப்போட்டியில் 20 வயதுக்குட்பட்ட 7 பேர்கொண்ட 20 அணிகள் பங்குபற்றினார்கள்.

டொன் பொஸ்கோ தொழிற்கல்வி நிறுவன அதிபர் அருட்தந்தை நதீப் அவர்களின் ஏற்பாட்டில் அருட்தந்தை மெல்வின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்போட்டியில் மாங்குளம் டொன் பொஸ்கோ குருமட அதிபர் அருட்தந்தை பயஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

 

By admin