கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையும் தொழிற்பயிற்சி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த ஒளிவிழா கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கிறிஸ்மஸ் கரோல் பாடல்கள், நடனம், நாடகம் என்பன இடம்பெற்றன.
கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் பிரதீபா காயத்திரி கஜபதி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் அயற் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள், தொழிற்கல்வி நிறுவன மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin